001-234-567-8910

5th Avenue Madson, NY758, USA

Get Update on our recent Gadgets & Tabs

Sunday, May 10, 2020

MI BOX 4K ஸ்ட்ரீமிங் பெட்டி அறிமுகம்! விலை ரூ.3,499 மட்டுமே!

 

 



Xiaomi இந்தியாவில் புதிய 4 கே ஸ்ட்ரீமிங் பெட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஷாவ்மி எம்ஐ பாக்ஸ் 4 கே வெள்ளிக்கிழமையன்று தொடங்கப்பட்டது. இந்த தயாரிப்பைப் பயன்படுத்தி எந்த டிவி அல்லது மானிட்டரையும் ஸ்மார்ட் டிவியாக மாற்றலாம். புதிய ஸ்ட்ரீமிங் பெட்டி ஆண்ட்ராய்டு டிவி 9-ல் இயக்கும். இதை எந்த HDMI போர்ட்டிலும் இணைக்க முடியும். இந்த சாதனம் வைஃபை வழியாக இணையத்துடன் இணைக்கப்படும்.இதில் புளூடூத் ரிமோட் மற்றும் பிளே ஸ்டோர் ஆதரவும் உள்ளது. ஷாவ்மி எம்ஐ பாக்ஸ் 4 கே, மே 11 மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும். சீன நிறுவனம் இந்த ஸ்ட்ரீமிங் பெட்டியை Mi.com-ல் இருந்து விற்பனை செய்யும். ஷாவ்மி எம்ஐ பாக்ஸ் 4 கே-வின் விலை ரூ.3,499 ஆகும்.  

Mi TV Range to Get PatchWall 3.0 With New Content Partners, Improved UI 

 இந்த ஸ்ட்ரீமிங் பெட்டியை எந்த டிவியுடனும் இணைப்பதன் மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியை உருவாக்க முடியும். ஷாவ்மி எம்ஐ பாக்ஸ் 4 கே ஸ்டாக் ஆண்ட்ராய்டு இடைமுகத்தை இயக்கும். மற்ற ஆண்ட்ராய்டு டி.வி.கள் நிறுவனத்தின் சொந்த PatchWall தோலைப் பயன்படுத்தும்போது. ​​சீன நிறுவனம் ஸ்ட்ரீமிங் பெட்டியில் ஸ்டாக் ஆண்ட்ராய்டை வழங்கியுள்ளது. 

 ஷாவ்மி எம்ஐ பாக்ஸ் 4 கே-வில் HDMI போர்ட் உள்ளது. இது ஒரு யூ.எஸ்.பி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஹெட்ஃபோன்கள் மற்றும் பிற பாகங்கள் புளூடூத் வழியாக இந்த சாதனத்துடன் இணைக்கப்படலாம். உள்ளமைக்கப்பட்ட Chromecast அல்ட்ரா உள்ளது. இதன் விளைவாக, ஸ்மார்ட்போனிலிருந்து 4K-ஐ அனுப்பலாம். 

 ஷவ்மியின் ஸ்ட்ரீமிங் பெட்டி இந்தியாவில் Amazon Fire TV Stick 4K உடன் நேரடி போட்டியை எதிர்கொள்ளும். அமேசானின் ஸ்ட்ரீமிங் ஸ்டிக்கின் விலை ரூ.5,999 ஆகும்.

ஜியோவின் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் அறிமுகம்!

 
 கொரோனா வைரஸ் தொற்றால், எல்லோரும் வீட்டில் வேலை செய்து வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, Jio ரூ.2,399-க்கு புதிய ப்ரீபெய்ட் ப்ளானை கொண்டு வந்துள்ளது. இந்த ப்ளான் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது 365 நாட்கள் செல்லுபடியாகும். மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளானுடன் "ஒர்க் ஃப்ரம் ஹோம்" ஆட்-ஆன் பேக்கைக் கொண்டு வந்துள்ளது. ரூ.151, ரூ.201 மற்றும் ரூ.251 என்ற ப்ளான்களில் கூடுதலாக 50 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம்.


2,399 ப்ரீபெய்ட் ப்ளான்                                                                             

ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளானில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் உடன் இந்த ப்ளான் 365 நாட்கள் செல்லுபடியாகும். நிறுவனம் பிப்ரவரியில் ரூ.2,121 ப்ளானை கொண்டு வந்தது. அந்த ப்ளானில் ஜியோ ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் 336 நாட்கள் வேலிடிட்டியை வழங்கியது.


ரூ.151, ரூ.201 மற்றும் ரூ.251 ஆட்-ஆன் பேக்குகள்:

ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளானுடன், ஜியோ ரூ.151, ரூ.201 மற்றும் ரூ.251 ஆட்-ஆன் பேக்கை கொண்டுவந்துள்ளது. ரூ.151 ப்ளானில் 30 ஜிபி கூடுதல் டேட்டா, ரூ.201 ப்ளானில் 40 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் ரூ.251 ப்ளானில் 50 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும். அன்றைய டேட்டா பேக் முடிந்த பிறகும் அதிவேக இணையத்தைப் பயன்படுத்த இந்த ப்ளான்கள் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆட்-ஆன் பேக்குகள் வெவ்வேறு வேலிடிட்டியை வழங்குகின்றன. வாடிக்கையாளரின் தற்போதைய ப்ளான் வேலிடிட்டி முடியும் வரை இந்த கூடுதல் பேக்கிலிருந்து கூடுதல் டேட்டாவை பயன்படுத்தப்படலாம்.

கூடுதலாக, ரூ.11, ரூ.21, ரூ.31, ரூ.51 மற்றும் ரூ.101 ஆட்-ஆன் பேக்குகள் முன்பு இருந்ததைப் போலவே அதே பலன்களை வழங்கும்.

வெறும் ரூ.1 க்கு D2h அறிவித்துள்ள ரம்ஜான் + லாக்டவுன் ஆபர்!

 
டிஷ் டிவியின் டி.டி.எச் பிராண்டான D2h தனது வாடிக்கையாளர்களுக்கு பல அற்புதமான சலுகைகள் மற்றும் பேக்கேஜ்களை அறிவித்துள்ளது.
 

நிறுவனத்தின் "Friends and Family Recharge" ஆனது எந்தவொரு d2h வாடிக்கையாளருக்கும் d2h வலைத்தளம் வழியாகவோ அல்லது d2h இன்பினிட்டி ஆப் வழியாகவோ அந்தந்த RTN கள் / வாடிக்கையாளர் ஐடிகளைப் பயன்படுத்தி வேறு எந்த d2h வாடிக்கையாளருக்கும் ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.


இதை சலுகையின் ஒரு பகுதியாக ரீசார்ஜ் செய்வதற்கு ரூ.10 கேஷ்பேக்காக கிடைக்கும்.

இந்த டி.டி.எச் நிறுவனத்திலிருந்து புதுப்பிக்கப்பட்ட மற்ற திட்டங்களில் ஒன்று தான், அதன் ‘யூ ப்ராமிஸ் வி ரெஸ்யூம்’ திட்டம், இது வாடிக்கையாளர்களுக்கு மாதம் வெறும் ரூ.10 க்கு ஐந்து நாட்கள் நீட்டிக்கப்பட்ட ரீசார்ஜ் கிரெடிட் விண்டோவை வழங்குகிறது.


கூடுதலாக, டி2ஹெச் ரம்ஜான் தொடர்பான கன்டென்ட்களை இயக்கும் சேனல் 785 இல் இலவச ‘ரம்ஜான் முபாரக்’ நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், இப்போது ஒரு புதிய ‘ஸ்பெஷல் ரம்ஜான் காம்போ’ திட்டமும் கிடைக்கிறது, இது சந்தாதாரர்கள் பிராந்திய செய்தி சேனல்களுடன் ஆன்மீக இஸ்லாமிய சேனல்களை ரூ.78.60 என்கிற ரீசார்ஜ் மூலம் பார்க்க அனுமதிக்கிறது, இது ஒரு எளிய மிஸ்டு கால் ஆக்டிவ் மற்றும் டிஆக்டிவேட் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ரம்ஜான் சலுகையாக நிறுவனம் அதன் இஸ்லாமிய ஆன்மீக சேவையான Ibadat Active-ஐ முதல் மாதத்திற்கு வெறும் ரூபாய் 1 க்கு வழங்குகிறது. இது சேனல் எண் 786 இல் கிடைக்கிறது.



கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 பரவல் மற்றும் பீதி காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலை லாக்டவுன் நாட்களில் தனது வாடிக்கையாளர்களை வீட்டிலேயே பொழுது போக்கிக்கொள்ளும் நோக்கத்தின் கீழ், d2h நிறுவன அதன் கன்டென்ட்-ரிச் சேவைகளான - ஃபிட்னஸ் ஆக்டிவ், டான்ஸ் ஆக்டிவ், த்ரில்லர் ஆக்டிவ், எவர்க்ரீன் கிளாசிக் ஆக்டிவ், காமெடி ஆக்டிவ், கிட்ஸ் ஆக்டிவ் போன்றவைகளை - முதல் மாதத்திற்கு ரூ.1 க்கு வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Wednesday, January 15, 2020

டிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஃபேஸ்புக்

 
ஃபேஸ்புக்

















ஃபேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் லஸ்ஸோ என்ற செயலியை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் லஸ்ஸோ செயலியை இந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் லஸ்ஸோ சேவையை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஃபேஸ்புக் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது, டிக்டாக் செயலி லஸ்ஸோவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் சிங்கப்பூரில் உள்ள ஃபேஸ்புக் குழு ஒன்று இந்திய வெளியீட்டிற்கு லஸ்ஸோ செயலியை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் டிக்டாக் வளர்ச்சிக்கு காரணமாக விளங்கியவற்றை அறிந்து கொள்ள ஃபேஸ்புக் நிறுவனம் மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் உதவியுடன் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


டிக்டாக்கிற்கு போட்டியை ஏற்படுத்தும் நோக்கில், லஸ்ஸோ சேவையில் இணைந்து கொள்ள கிரியேட்டர்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட லஸ்ஸோ சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட லஸ்ஸோ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இதுவரை பல லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர்.

லஸ்ஸோ செயலியை இந்தியா தவிர இந்தோனிசியா போன்ற வளரும் சந்தைகளிலும் வெளியிட ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய முன்பதிவு விவரம்

 
சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்



















சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு இந்தியாவில் அடுத்த வாரம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பதிவை தொடர்ந்து கேலக்ஸி நோட் 10 லைட் விற்பனை பிப்ரவரி மாத துவக்கத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.

புதிய நோட் லைட் ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. ரேம் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் 6 ஜி.பி. ரேம் வேரியண்ட் ரூ. 39,900 வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் ஆரா குளோ, ஆரா பிளாக் மற்றும் ஆரா ரெட் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.



சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் அதிநவீன கேமரா, எஸ் பென், பெரிய டிஸ்ப்ளே, நீண்ட நேர பேட்டரி பேக்கப் உள்ளிட்டவை வழங்கும் என தெரிகிறது. கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் எஸ் பென் ப்ளூடூத் லை எனர்ஜி வசதி மற்றும் ஏர் கமாண்ட் வசதி வழங்கப்படலாம்.

சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.7 இன்ச் 1080x2400 பிக்சல் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 10 மற்றும் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்களுக்கென சிறப்பு பக்கம் துவங்கப்பட்டுள்ளது. முன்னதாக கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்கியது.

அறிமுகமானது ஹானர் 9X; எதிர்பார்த்ததை விட குறைவான விலை! Flipkart இல் எப்போது முதல் வாங்க கிடைக்கும்?

 

அறிமுகமானது ஹானர் 9X; எதிர்பார்த்ததை விட குறைவான விலை! Flipkart இல் எப்போது முதல் வாங்க கிடைக்கும்?


ஹானர் நிறுவனம் இன்று இந்தியாவில் அதன் புதிய தயாரிப்புகளான ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போன், ஹானர் மேஜிக் வாட்ச் 2 ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஹானர் பேண்ட் 5 ஐ ஃபிட்னஸ் பேண்ட் ஆகியவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட் ஆனது கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் ஆன ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது வேறுபட்ட அம்சங்களை கொண்டுள்ளது.









இந்திய விலை நிர்ணயம் & விற்பனை:


ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போனின் அடிப்படை மாறுபாடான 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.13,999 என்றும், அதன் ஹை எண்ட் மாறுபாடு ஆனது 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.16.999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் சபையர் ப்ளூ ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது, இது பிளிப்கார்ட் வழியாக ஜனவரி 19 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.


அறிமுக சலுகைகள்:


முதல் நாள் விற்பனையின் போது "ஒரு குறிப்பிட்ட நேர சலுகையின்" ஒரு பகுதியாக ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் மீது ரூ.1,000 என்கிற தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் கோட்டக் மஹிந்திரா டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ஜனவரி 19 முதல் 2020 ஜனவரி 22 வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 9 எக்ஸ் டிஸ்பிளே & ப்ராசஸர்:


டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட ஹானர் 9 எக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கஸ்டம் EMUI 9.1 ஸ்கின் கொண்டு இயங்குகிறது. இது 6.59-இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ டிஸ்பிளேவை (1080 x 2340 பிக்சல்கள்) கொண்டுள்ளது. மேலும் இது 91 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் 391 பிபிஐ பிக்சல் அடர்த்தியையும் கொண்டுள்ளது. இது 6 ஜிபி வரை ரேம் உடனாக ஹைசிலிகான் கிரின் 710 எஃப் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.


ஹானர் 9 எக்ஸ் கேமராக்கள்:


ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போனின் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பில் 48 மெகாபிக்சல் அளவிலான (எஃப் / 1.8) பிரதான கேமரா உள்ளது, இது ஏஐஎஸ் சூப்பர் நைட் மோட் ஆதரவுடன் வருகிறது. உடன் 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ கொண்ட 8 மெகாபிக்சல் அளவிலான வைட் அங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் ஆகியவைகள் உள்ளன. செல்பீகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் (எஃப் / 2.2) அளவிலான முன்பக்க கேமரா இருக்கிறது, இதுவொரு பாப்-அப் செல்பீ கேமரா ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஹானர் 9 எக்ஸ் பேட்டரி மற்றும் இதர அம்சங்கள்:


மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்ட 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பகத்தை கொண்டுள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் வழியாக 10W சார்ஜிங் ஆதரவு கொண்ட ஒரு 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4 ஜி எல்டிஇ, ப்ளூடூத் 4.2, வைஃபை 802.11 அ / பி / ஜி / என் / ஏசி, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் மற்றும் க்ளோனாஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. சென்சார்களை பொறுத்தவரை, கைரேகை சென்சார், காம்பஸ், ஆம்பியன்ட் லைட் சென்சார் மற்றும் கிராவிட்டி சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில் ஹானர் 9X ஆனது 163.5 x 77.3 x 8.8 மிமீ மற்றும் 196.8 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Hey, we've just launched a new custom color Blogger template. You'll like it - https://t.co/quGl87I2PZ
Join Our Newsletter