001-234-567-8910

5th Avenue Madson, NY758, USA

Get Update on our recent Gadgets & Tabs

Showing posts with label Mobile. Show all posts
Showing posts with label Mobile. Show all posts

Wednesday, January 15, 2020

அறிமுகமானது ஹானர் 9X; எதிர்பார்த்ததை விட குறைவான விலை! Flipkart இல் எப்போது முதல் வாங்க கிடைக்கும்?

 

அறிமுகமானது ஹானர் 9X; எதிர்பார்த்ததை விட குறைவான விலை! Flipkart இல் எப்போது முதல் வாங்க கிடைக்கும்?


ஹானர் நிறுவனம் இன்று இந்தியாவில் அதன் புதிய தயாரிப்புகளான ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போன், ஹானர் மேஜிக் வாட்ச் 2 ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஹானர் பேண்ட் 5 ஐ ஃபிட்னஸ் பேண்ட் ஆகியவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட் ஆனது கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் ஆன ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது வேறுபட்ட அம்சங்களை கொண்டுள்ளது.









இந்திய விலை நிர்ணயம் & விற்பனை:


ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போனின் அடிப்படை மாறுபாடான 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.13,999 என்றும், அதன் ஹை எண்ட் மாறுபாடு ஆனது 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.16.999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் சபையர் ப்ளூ ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது, இது பிளிப்கார்ட் வழியாக ஜனவரி 19 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.


அறிமுக சலுகைகள்:


முதல் நாள் விற்பனையின் போது "ஒரு குறிப்பிட்ட நேர சலுகையின்" ஒரு பகுதியாக ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் மீது ரூ.1,000 என்கிற தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் கோட்டக் மஹிந்திரா டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ஜனவரி 19 முதல் 2020 ஜனவரி 22 வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 9 எக்ஸ் டிஸ்பிளே & ப்ராசஸர்:


டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட ஹானர் 9 எக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கஸ்டம் EMUI 9.1 ஸ்கின் கொண்டு இயங்குகிறது. இது 6.59-இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ டிஸ்பிளேவை (1080 x 2340 பிக்சல்கள்) கொண்டுள்ளது. மேலும் இது 91 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் 391 பிபிஐ பிக்சல் அடர்த்தியையும் கொண்டுள்ளது. இது 6 ஜிபி வரை ரேம் உடனாக ஹைசிலிகான் கிரின் 710 எஃப் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.


ஹானர் 9 எக்ஸ் கேமராக்கள்:


ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போனின் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பில் 48 மெகாபிக்சல் அளவிலான (எஃப் / 1.8) பிரதான கேமரா உள்ளது, இது ஏஐஎஸ் சூப்பர் நைட் மோட் ஆதரவுடன் வருகிறது. உடன் 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ கொண்ட 8 மெகாபிக்சல் அளவிலான வைட் அங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் ஆகியவைகள் உள்ளன. செல்பீகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் (எஃப் / 2.2) அளவிலான முன்பக்க கேமரா இருக்கிறது, இதுவொரு பாப்-அப் செல்பீ கேமரா ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஹானர் 9 எக்ஸ் பேட்டரி மற்றும் இதர அம்சங்கள்:


மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்ட 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பகத்தை கொண்டுள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் வழியாக 10W சார்ஜிங் ஆதரவு கொண்ட ஒரு 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4 ஜி எல்டிஇ, ப்ளூடூத் 4.2, வைஃபை 802.11 அ / பி / ஜி / என் / ஏசி, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் மற்றும் க்ளோனாஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. சென்சார்களை பொறுத்தவரை, கைரேகை சென்சார், காம்பஸ், ஆம்பியன்ட் லைட் சென்சார் மற்றும் கிராவிட்டி சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில் ஹானர் 9X ஆனது 163.5 x 77.3 x 8.8 மிமீ மற்றும் 196.8 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Hey, we've just launched a new custom color Blogger template. You'll like it - https://t.co/quGl87I2PZ
Join Our Newsletter